Thursday, December 18, 2008

488. இந்திய அம்மாவா சும்மாவா?

குமாரை பார்க்க ஊரிலிருந்து அவனது அம்மா வந்திருந்தார். குமாரின் ரூம்மேட் ஒரு பெண், பெயர் ரம்யா.

ரம்யாவின் கைவண்ணத்தில் அம்மாவுக்கு இரவு விருந்து தயாரானது. சாப்பிடும்போது, குமாரின் அம்மா, 'இந்த ரம்யா இவ்வளவு அழகாக இருக்கிறாளே, குமாருக்கும் இவளுக்கும் இடையே ரூம்மேட் தாண்டிய உறவு இருக்குமோ?' என்று எண்ணினாள். இந்த சந்தேகம் அவளுக்கு கொஞ்ச காலமாகவே இருந்து வந்தது. இப்போது, குமார்-ரம்யா இடையே ஆன நெருக்கமும் அவர்களது நடவடிக்கைகளும், அம்மாவின் சந்தேகத்தை அதிகப்படுத்தின!

அம்மாவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட குமார், "அம்மா, நீங்கள் நினைப்பது போல இல்லை, நானும் ரம்யாவும் வெறும் ரூம்மேட்ஸ் தான்" என்றான்!

அம்மா ஊருக்குச் சென்று ஒரு வாரம் கழித்து, ரம்யா குமாரிடம், "உங்கள் அம்மாவுக்கு விருந்தளித்த நாளிலிருந்து, வீட்டில் இருந்த எனது வெள்ளித் தட்டைக் காணவில்லை. உங்கம்மா எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை தானே?!?" என்று கேட்டாள். குமார்,"இருக்காது, எதற்கும் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி விசாரிக்கிறேன்!" என்றான்.

குமார் சாமர்த்தியமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு இப்படி எழுதினான்:
அன்பான அம்மா,
நலம் நலமறிய ஆவல். நீங்கள் இந்த வீட்டிலிருந்து ஒரு வெள்ளித்தட்டை எடுத்துச் சென்றீர்கள் என்று சொல்ல வரவில்லை. அது போல, நீங்கள் அதை எடுத்துச் செல்லவில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை. விஷயம் என்னவென்றால், நீங்கள் இங்கு விருந்து சாப்பிட்டுச் சென்றதிலிருந்து அந்தத் தட்டைக் காணவில்லை!
--- குமார்

ஒரு பத்து நாட்கள் கழிந்தபின், அம்மாவிடமிருந்து பதில் கடிதம் வந்தது:
அன்புள்ள குமார்,
நலம் நலமறிய ஆவல். நீயும் ரம்யாவும் ஒரே படுக்கையில் உறங்குவதாக நான் சொல்ல வரவில்லை, அதே நேரம், நீயும் அவளும் ஒரே படுக்கையில் உறங்குவதில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை!

விஷயம் என்னவென்றால், ரம்யா அவளது படுக்கையில் உறங்குபவளாக இருந்தால், இந்நேரம் அந்த வெள்ளித் தட்டை கண்டு பிடித்திருப்பாள், அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் !?!?

இப்படிக்கு
அன்புள்ள அம்மா

கதையின் நீதி:
அம்மாவிடம் பொய்மை கூடாது, அதுவும் இந்திய அம்மாவிடம் கூடவே கூடாது :-)

எ.அ.பாலா

17 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test ;-)

Sridhar Narayanan said...

:-) இந்தக் கதையை ஏற்கெனவே சில ஃபார்வர்டட் மெயிலில் படித்திருக்கிறேன். தமிழ்படுத்தியதற்கு நன்றி. ஆனால் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்-ல் வெள்ளிதட்டு சேரவில்லையே. ரம்யாவின் வாட்சோ அல்லது மோதிரமோ காணாமல் போயிருந்தால் இன்னமும் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது :-)

said...

Hi Bala,

Nice one

I am just thinking of own story

thanks

ஸ்ரீதர்கண்ணன் said...

Super Sir :-)

தங்ஸ் said...

உண்மைப்பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என நான் சொல்லவில்லை. அதே நேரம் பாலாஜியை குமார் என்றும் அழைப்பார்கள் என்றும் என்னால் கூற முடியவில்லை:-))))))

குடுகுடுப்பை said...

சூப்பருங்கோ, நீதி யாரிடமும் பொய்மை கூடாது என்றும் இருக்கலாம்.ஆனால் இக்காலத்தில் முடியாது

ரவி said...

very nice one bala

dondu(#11168674346665545885) said...

:)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் படித்த ஆங்கிலக் கதையில் யூத அன்னை என்று இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பட்டாம்பூச்சி said...

கதை நல்லா இருக்கு. :-)

பட்டாம்பூச்சி said...

நல்ல கதையா இருக்கே. :-)

அன்புடன்,
பட்டாம்பூச்சி.

enRenRum-anbudan.BALA said...

sridhar narayanan,
நன்றி. வெள்ளித்தட்டு கொஞ்சம் இடிக்குதில்ல :)

அனானி, ஸ்ரீதர் கண்ணன்
நன்றி.

தங்ஸ்,
நக்கலு ? ;-)

குடுகுடுப்பை,
ரொம்ப விரக்தியா பேசாதீங்கோ ;-)

enRenRum-anbudan.BALA said...

செந்தழல் நண்பா,
நன்றி :) உங்களைத் தொடர்ந்து டோண்டு சாரும் வந்திருப்பதன் மர்மம் என்னவோ ??? :)

டோண்டு சார்,
நகைச்சுவைப் பதிவில் controversy (யூத அம்மா) வேணாம் :)

ஆனா நீங்க சொல்றது உண்மையே, இஸ்ரேலியர்களுடன் நிறையப் பழகியவன் என்ற வகையில் சொல்கிறேன் !!!

பட்டாம்பூச்சி,
தாங்க்ஸ் :)

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD STORY & GOOD TWIST IN THE END...RESEMBLES WRITER SUJATHA, SINCE WE ARE ONE AMONG THE NUMEROUS FANS OF THE GREAT WRITER....

RAMASUBRAMANIA SHARMA said...

SURE...

enRenRum-anbudan.BALA said...

Thanks, Ramasubramania sharma !

A N A N T H E N said...

பல்சுவையில் படித்தப் பின் இங்கு வந்தேன், உங்கள் மொழிபெயர்ப்பும் அருமை...

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails